குணம் - Kunnam
s. quality, attribute or property in general, பண்பு; 2. excellence, attribute (of a deity), இலட்சணம்; 3. dispositon, nature, temper, தன்மை; 4. good disposition of the mind or body, probity, சீர்மை; 5. wholesomeness, healthfulness, சுகம்; 6. bowstring, வின்னாண்; 7. thread, நூல்; 8. a water-pot, குடம்; 9. colour, நிறம்.
அவன் குணம் பேதலித்திருக்கிறது, (பேதித்திருக்கிறது) he is changed for the worse. அதிலும் இது குணம், this is better than that. குணத்தோடே கேள், hear me with a right spirit and patience. குண குணிப்பெயர்கள், abstract noun and subjective noun, subjects with attributes as செந்தாமரை (தாமரை = subj. or குணி, செம் = attribute or குணம்.) குணக்குன்று, --நிதி, a person of noble character, a virtuous man; 2. God. குணங்குறி, disposition, characteristics. குணசாலி, --மணி, --வான், --சீலன்,-- வந்தன்,--முடையான், குணாளன், a goodnatured person.
இலக்கணம் - Ilakkannam
இலட்சணம், s. a mark, spot or sign, குறி; 2. property, quality, attribute, இயல்பு; 3. elegance beauty, personal gracefulness, comeliness, சிறப்பு; 4. propriety, decency, முறைமை; 5. grammar, philology, இலக்கண நூல்.
இலக்கணச் சொல், a good elegant word. இலக்கணவிலக்கியம், (இலக்கணம்+ இலக்கியம்) grammatical works and classical writings. இலக்கணன், a modest and polite man. இலக்கணி, a grammarian. இலட்சணப்பிழை, deformity, want of proper qualities, want of symmetry. இலட்சணமானமுகம், a goodly looking face. இலக்கண முறை, -விதி, the rules of grammar. பாஷாவிலக்கணம், philology.