இணக்கம் - Innakkam
s. (இணங்கு) agreeableness, agreement, conjunction, friendship, union, உடன்பாடு; 2. fitness, பொருத் தம்; 3. exactness, திருத்தம்.
பிணை - Pinai
s. a bail, security, surety, சாமீன்; 2. desire, விருப்பம்; 3. consent, agreement, உடன்பாடு; 4. a flower garland, பூமாலை; 5. female of the elephant, horse, camel, ass, deer, pig, bos grunniens and dog; 6. a deer, மான்; 7. v. n. same as பிணையல்.
மாடுகள் பிணைவருகிறது, the oxen go round about a threshing. பிணைகாரன், -யாளி, one who stands bail or is surety for another. பிணை கொடுக்க, -வைக்க, to give security. பிணைக்கடுதாசி, -ச்சீட்டு, -முறி, -உறுதி, a bail bond. பிணை சொல்ல, to become bail for one by promise. பிணை நிற்க, -ப்பட, -போக, to stand surety for one. பிணை வாங்க, to take security. நபர் பிணை, personal security or bail. ரொக்கப் பிணை, money-security.
நேர் -
s. & adj. (நேர்மை), straightness, செவ்வை; 2. justice, impartiality, ஒழுங்கு; 3. virtue, morality, சீர்; 4. row, series, வரிசை; 5. that which is opposite or over against, எதிர்; 6. agreement, consent, உடன்பாடு; 7. half, a moiety, பாதி; adj. upright, honest, straight etc.
நேரலன், (pl. நேரலர், நேரலார்), an enemy. நேராய், நேரே, adv. straightway, directly. நேராளி, an upright, honest, punctual person. நேரான, நேர், adj. see adj. meanings. நேரானமனம், an upright, honest person. நேரானவிலை, a reasonable price. நேரிளையவன், a brother next younger. நேரீனம், dishonesty, unfairness. நேருக்கு நேராயிருக்க, to be exactly straight or direct. நேருஞ்சீருமாயிருக்க, to be in good order. நேரே, see நேராய். நேர்சீர், due order, amiableness. நேர்தப்ப, to pass the bounds of propriety. நேர்பண்ண, -ஆக்க, to make even, to adjust, to reconcile. நேர்முகம், facing towards. நேர்மேற்கே, due west. நேர்வழியாய், straightway, straight on.
From Digital DictionariesMore