விசை - Visai
s. spring, elasticity, force; 2. swiftness, haste, speed, துரிதம்; 3. spring-trap, பொறி; 4. any mechanical instrument as a lever, மிண்டி; 5. change, turn, தரம்; 6. a stay, a prop.
விசைவைத்துத் தூக்க, to lift up with a lever. என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me. விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project. விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty. விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried. வில்லை விசையேற்ற, to strain a bow. விசையாய், fast, vehemently. விசையாய் அடிக்க, to strike rapidly. விசையாய்ப் போனான், he went away in haste. இந்த விசை, this time. எத்தனை விசை, how often? ஒருவிசை, once. இன்னும் ஒருவிசை, once more.