ஏற்று - Ettru
III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person.
குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me. இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that. ஏற்றுமதி, exportation, export, cargo. ஏற்றுமதிச் செலவு, shipping charges. ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export. கணக்கை ஏற்ற, to sum up. குடியேற்ற, to populate, to colonize. தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption. விளக்கேற்ற, to light a candle, to set up a candle.
எழுப்பு - Ezhuppu
III. v. t. awake, rouse, excite, துயிலெழுப்பு; 2. raise, கிளப்பு; 3. erect, as a building, எழும்பச் செய்.
உயிரோடெழுப்பினார், he raised from the dead, he restored to life. எழுப்பு, எழுப்புதல், v. ns. Rousing, waking. மார்க்க எழுப்புதல், religious revival. மதில் எழுப்பு, the raising of a wall.
ஊக்கு -
III. v. t. begin with spirit, energy, carry out, execute with energy, முயலு; 2. rouse to action, எழுப்பு; 3. teach, கற்பி; 4. consider, meditate upon, சிந்தி.
ஊக்கல், putting forth effort, முயலு தல்; 2. abundance, மிகுதி.
From Digital Dictionaries