வீடு - Viidu
s. a house,
இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity,
மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving,
விடல்.
வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house. வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife. வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family. வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman). வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house. வீட்டுப்பெண், a daughter-in-law. வீட்டுவாடகை, rent of a house. வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house. வீட்டே (வீட்டுக்குப்) போ, go home. கிரகங்களின் வீடு, the region of the planets.
கிரகணம் - Kirakanam
s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse.
கிரகணம் கணிக்க, to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்) the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse. சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand (of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse. முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-, an annular eclipse.
சித்தி - Sithi
s. success, attainment, prosperity, வாய்த்தல்; 2. heavenly bliss, beatitude, மோட்சம்; 3. supernatural powers obtained by devotion, தபோ பலம்; 4. firmness, durability, திடம், (as in காயசித்தி, firmness of body); 5. soap, சவுக்காரம்; 6. strychnine tree, எட்டிமரம்; 7. right of cultivating the land.
காரியம் சித்தித்தது, the thing proved a success. பொல்லாப்பு உனக்குச் சித்திக்கும், an evil will befall you. சித்தியடைய, to succeed; 2. to attain salvation; 3. to die (used with reference; to the death of an ascetic).
From Digital DictionariesMore