அரை - Arai
s. half, பாதி; 2. the waist, இடை; 3. மரத்தினடி, trunk of a tree; & 4. stomach.
அரைக் கட்டிக்கொள், gird yourself. அரைக் கச்சை, girdle. அரைக்கால், an eighth, half a quarter. அரைச்சட்டை, waist coat; jacket. அரைஞாண், அரைநாண், cord round the loins. அரைநாழிகை, half of an Indian hour or 12 minutes. அரைப்பை, a purse tied round the waist. அரைமனசாயிருக்க, to be reluctant, to be half willing. அரையாப்பு, அரையாப்புக்கட்டி, a venereal ulcer, bubo. அரைவாசி, half. அரைவாசி ஆயிற்று, it is half done. அரைவாசி வார்க்க, to fill half full. அரைகுறையான சீர்திருத்தம், imperfect reform. அரைவட்டமாக விஸ்தரிக்க, to extend in a semi-circular form. அரை உத்தியோக முறையில், semi-officially.
உத்தியோகம் - uththiyookam
s. an office, an employment, தொழில்; 2. enterprise, endea- vour, முயற்சி.
உத்தியோகக்காரன், உத்தியோகஸ்தன், an officer, a public functionary. உத்தியோகச் செருக்கு, pride of office. உத்தியோகச் செல்வாக்கு, power or influence of an office. உத்தியோகத்திலே அமர்த்த, to get one employed. உத்தியோகத்திலே வைத்துக்கொள்ள, to employ. உத்தியோகம் பண்ண, to hold an office, to pursue a business. உத்தியோக முறையில், -தோரணையில், officially.