நிறுத்து - Niruthu
III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing.
நீ நிறுத்து, அவன் சொல்லட்டும், stop, let him speak. நிறுத்தல், v. n. postponing; 2. see under நிறு; 3. as நிறுப்பு which see. நிறுத்திப்போட, -வைக்க, to stop, to delay, to adjourn. நிறுத்தி வாசி, read slowly. விளக்கை நிறுத்த, to put out light.
இயங்கு - Iyangu
II. v. i. move, அசை; 2. walk. நட; 3. respire, breathe; சுவாசி; 4. shine, பிரகாசி.
இயக்கம், v. n. motion, movement, respiration; 2. light, brightness, பிரகாசம். ஜாதீய இயக்கம், national movement.
மூச்சு - Muussu
s. breath or respiration, சுவாசம்; 2. life, உயிர்ப்பு; 3. strength, பலம்.
அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last. மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise. ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath. மூச்சடக்க, to draw in the breath. மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma. மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence. மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale. மூச்சுவிட, to breathe, to respire. பெருமூச்சு, see under பெருமை.
From Digital DictionariesMore