மூலை - Moolai
s. corner, angle,
கோணம்; 2. one of the intermediate points of the compass,
மூலைத் திசை; 3. a house,
வீடு.
மூலைக் காற்று, wind blowing from a corner region. மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside. மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof. மூலை முடக்கு, a crooked way, a nook. மூலையிலே ஒதுங்க, to creep into a corner. தென்கிழக்கு மூலை, south-east. தென்மேற்கு மூலை, south-west. வடகிழக்கு மூலை, north-east. வடமேற்கு மூலை, north-west.
வடக்கு - Vadakku
s. north.
வட, adj. northern. வடகலை, the religious mark of the northern branch of the Vaishnavas (opp. to தென்கலை); 2. Sanscrit literature. வடகாற்று, வடக்கை, the northern wind, வாடை. வடகிழக்கு, -கீழ்த்திசை, north-east. வடகோடு, the northern horn of the crescent moon. வடகோடை, the north-west wind. வடக்கத்தியான், an inhabitant of the northern country. வடக்கே, வடக்காக, வடபுறமாக, northward. வடதிசைப்பாலன், Kubera, the guardian of the north. வடநூல், a Sanscrit book. வடநூலோர், those learned in Sanscrit. வடந்தை, north-wind. வடபாரிசம், வடபுறம், (poet. வடபால்) northern side or quarter. வடமர், a class of Brahmins. வடமலை, the mountain Tirupati; 2. mount Meru. வடமலைவாணன், -வாண்டன், a kind of paddy; 2. Vishnu as residing in வடமலை. வடமீன், a small star in Ursa Major, அருந்ததி. வடமேற்றிசைப்பாகன், Vayu, the guardian of the north-west. வடமொழி, Sanscrit. வடவேங்கடம், the mountain Tirupati, as distinguished from தென்வேங் கடம், or அழகர்மலை near Madura.