தினம் - Thinam
s. a day,
நாள்; 2. day-time,
பகல்;
(adv.) daily.
இது ஒரு தினம், this is a special day. தினகரன், the Sun. தினக்கூலி, daily wages. தினசரி, தினசேரி, daily. தினசரிக் கணக்கு, daily accounts. தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day. தினமணி, the sun. தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day. தினவர்த்தமானம், daily news. தினாதினம், various days; 2. a special day. தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம். தினேதினே, தினாந்தரம், daily. இன்றையதினம், this day. சுபதினம், a lucky day. நாளையதினம், to-morrow. நேற்றையதினம், yesterday.
தத்துவம் - Thathuvam
s. the essential nature of things, qualities, property, குணம்; 2. power, authority, அதிகாரம்; 3. truth, reality, உண்மை; 4. bodily vigour, strength, சத்துவம்; 5. sexual energy or appetite differing according to age, constitution etc; 6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல்.
தத்துவ ஆகமம், -நூல், a book of metaphysics. தத்துவக் கடுதாசி, a power of attorney, a warrant, a letter of administration. தத்துவ சாஸ்திரம், the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics. தத்துவ ஞானி, a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 தத்துவம். தத்துவத்திரயம், a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, ஆத்தும தத்துவம், சிவதத்து வம், and வித்தியா தத்துவம். தத்துவன், Siva, as lord of all powers; 2. Argha of the Jainas. தத்துவாதி, தத்துவாதிகள், a class of the Brahman caste. தத்துவாதீதன், God as not depending on powers and faculties. ஆள் தத்துவம், personality. உடற்கூற்றுத் தத்துவம், the nature and constitution of the body anatomically considered. தெய்வ தத்துவம், the Godhead. வாலதத்துவம், juvenility. வீரதத்துவம், heroism.
தாபம் - Thaapam
s. burning heat, fervency, உஷ்ணம்; 2. fervent desire, ardour, தவனம்; 3. distress, sorrow, துன்பம்; 4. a jungle, a forest, காடு.
தாபசுரம், -க்காய்ச்சல், burning fever. தாபத்திரயம், the three kinds of distress: ஆத்மிகம், or ஆன்மிகம், affliction from creatures; 2. தெய்விகம், affliction from the divine hand; பௌதிகம், afflictions caused by the elements. தாபநன், the Sun. கோபதாபம், heat of anger. பச்சாத்தாபம், contrition, repentance, sympathy. மனஸ்தாபம், மனத்தாபம், grief, sorrow of heart, regret, repentance of heart. விரகதாபம், lust.
From Digital DictionariesMore