தினம் - Thinam
s. a day,
நாள்; 2. day-time,
பகல்;
(adv.) daily.
இது ஒரு தினம், this is a special day. தினகரன், the Sun. தினக்கூலி, daily wages. தினசரி, தினசேரி, daily. தினசரிக் கணக்கு, daily accounts. தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day. தினமணி, the sun. தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day. தினவர்த்தமானம், daily news. தினாதினம், various days; 2. a special day. தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம். தினேதினே, தினாந்தரம், daily. இன்றையதினம், this day. சுபதினம், a lucky day. நாளையதினம், to-morrow. நேற்றையதினம், yesterday.
காடு - Kaadu
s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி.
நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated. காடாரம்பம், land where dry grain is grown. காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water). காடுபடு திரவியம், forest productions. forest produce. காடுவாரி, a rake, one who scrapes up all he can. காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe. காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc. காடுவெட்டி, a wood-cutter. காடோடி, a savage, rustic. காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow. காட்டாடு, a wild sheep. காட்டாள், a clown, a boor. காட்டுக்கீரை, different kinds of greens mixed together. காட்டுக்கோழி, a jungle fowl. காட்டுத்தனம், rusticity, uncultivated manners. காட்டுப்பன்றி, a wild boar. காட்டுப்பிள்ளை, a foundling. காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc. காட்டுப்புத்தி, rusticity, stupidity. காட்டுப்புறா, a wild dove. காட்டுமரம், a wild tree; காட்டுமிருகம், a wild beast. காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage. காட்டெருமுட்டை, dried cow-dung found in fields. காட்டேணி, a bison, காட்டா. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness. இடுகாடு, burial ground. குடிக்காடு, a village. சுடுகாடு, a place for burning the dead. பருத்திக்காடு, a cotton field. பிணக்காடு, a field covered with corpses. புகைக்காடு, great smoke. புல்லுக்காடு, pasture land, a meadow. புன்செய்க்காடு, high dry land. வயற்காடு, a paddy field. வெள்ளக்காடு, a general flood, inundation. நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
உருவம் - Uruvam
உருவு, s. shape, form, figure, வடிவம்; 2. beauty, அழகு; 3. image, idol, ரூபம்.
உருவம் காட்டி, a mirror. உருவம் மாற, to be transformed. உருவசாஸ்திரம், physiognomy. உருவச்சிலை, a statue. உருவப்படம், a portrait, a map.
From Digital DictionariesMore