இக்கட்டு - Ikkattu
s. straits, calamity, misery, distress, poverty, இடுக்கண்.
இக்கட்டான நிலைமை, critical stage. இக்கட்டுக்குள்ளாக, to be involved in distress. எனக்கு மெத்த இக்கட்டாயிருக்கிறது, I am in great straits and want. இக்கட்டுப் பட, --அனுபவிக்க, to suffer calamity.
உபத்திரவம் - upattiravam
(உபத்திரம்) s. affliction. distress, இக்கட்டு.
உபத்திரவகாலம், time of affliction. உபத்திரவப்பட, to suffer. உபத்திரவப்படுத்த, to afflict, persecute. உபத்திரமாயிருக்க, to be troublesome, or distressing. பசி உபத்திரவம், suffering of hunger. மனோபத்திரவம், distress of mind.
தாவந்தம் - tavantam
s. hell, நரகம்; 2. a great affliction, distress, இக்கட்டு.
தாவந்தப்பட, to be greatly distressed.
From Digital DictionariesMore