சாதகம் - saathakam
s. success, prosperity,
சித்தி;
2. habit, ability, practice, அப்பியாசம்; 3. a kind of cuckoo, சாதகப்புள்; 4. (ஜாதகம்) birth, nativity, பிறப்பு; 5. horoscope, astrological prognostication, சின்னமெழுதல்; 6. natural disposition, பிறவிக்குணம்; 7. a goblin, பூதம்; 8. that which hides, மறைப்பு.
அவனுடைய சாதகம் அப்படியிருக்கி றது, such is his horoscope or his nature. அவனுக்கு இது சாதகமாய்ப் போயிற்று, he has become skilful in this. சாதகக்காரன், சாதகன், one whose horoscope is calculated. சாதகக்குறிப்பு, a memorandum of the time of birth. சாதகபலன், the results of a horoscope. சாதகபாதகம், convenience and inconvenience. சாதகம் எழுத, --கணிக்க, to cast a horoscope, to predict future events by writing a horoscope. காரியசாதகம், success in an undertaking.
வழக்கம் - Vazhakkam
s. (வழங்கு) custom habit, usage, மாமூல்; 2. liberality, ஈகை; 3. that which is ordinary or conventional, அப்பியாசம்.
இடதுகை வழக்கமானவன், a lefthanded man. வழக்கச்சொல், a proverb, a word in common usage.
பழக்கம் - Pazhakkam
s. custom, habit, practice, வழக்கம்; 2. training, use, அப்பியாசம், 3. conversation, intercourse, acquaintance, அறிமுகம்; 4. tameness, domestication or gentleness, சாதுத்துவம்.
பழக்கமாக, to become acquainted with. பழக்கம்பண்ண, to accustom oneself to another.
From Digital DictionariesMore