சுட்டு - Suttu
s. intention, aim,
குறிப்பு; 2. a demonstrative letter,
சுட்டெழுத்து; 3. mark, distinction,
குறி; 4. honour,
நன்கு மதிப்பு; 5.
v. n. pointing, indication, allusion.
சுட்டுப்பெயர், சுட்டுச்சொல், demonstrative pronoun (as அவன், இவன்). சுட்டு விரல், the forefinger, ஆட்காட்டி விரல். சுட்டி, adv. part. concerning, about, குறித்து. அவனைச் சுட்டிப் பேசினான், he spoke about him. பிள்ளைகளைச் சுட்டி, with regard to the children. சுட்டிக் காட்ட, to point out; to show. சுட்டிப் பேச, to hint in discourse, to make a specific reference.
ஆள் -
s. a person, a grown man, ஆண் மகன்; 2. one that is able at act for oneself, a man of power, consequence, சுயாதீனன்; 3. a messenger, a labourer, servant, slave, அடிமை; 4. warrior, வீரன்; 5. husband, கணவன்.
ஆள்வினை, alacrity, bravery, முயற்சி, தைரியம். அவன் அதுக்கு ஆளல்ல, he is not capable of doing it. ஆட்காட்டி, a bird that screeches on seeing anybody at night, a lapwing; 2. the forefinger, ஆட்காட்டி விரல். ஆட்கூலி, the wages of a workman. ஆட்கொல்லி, murderer: 2. gold, money (fig.) ஆட்கொள்ள, to employ as a servant, to admit as a devotee. ஆட்டிட்டம் (ஆள்+திட்டம்) quantity fixed for an adult; marks for recognising a person. ஆட்பிடியன், an alligator. ஆளாக, to arrive at manhood; to be liable to. ஆளாக்க, to bring one up, to teach one to act for oneself (caus. of ஆளாக, to involve one into). ஆளோட்டி, slave-driver, overseer of workmen. ஆள்மாறாட்டம், false personation. ஆள்மாறாட்டம் செய்ய, to personate, to assume a disguise. ஆள்வள்ளி, the tapioca plant. ஆள்வீதம், the portion belonging to each person. கூலியாள், சிற்றாள், வீட்டாள், வேலை யாள், see under கூலி etc. தெய்வீக ஆள்தத்துவம், (christ.) God a Personal Being.