மது - Madhu
s. sweetness, இனிமை; 2. any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள்; 3. honey, தேன்; 4. spring, வசந்தகாலம்; 5. the name of Daitya slain by Vishnu.
மதுகண்டம், the koil, குயில். மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம், a bee; 2. honey of flowers. மதுகாரி, a bee, தேனீ. மதுகோசம், a bee-hive. மதுக்கெண்டை, a kind of fish. மதுசகன், Kama as the companion of spring. மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது. மதுதிருணம், sugar-cane, கரும்பு. மதுதூதம், the mango tree -- mangifera Indica. மதுதூலி, molasses. மதுபதி, -பலி, Kali the goddess. மதுபம், a bee, தேனீ (as sucking honey). மதுபானம், any sweet and intoxicating drink. மதுமத்தை, the ஊமத்தை plant. மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி. மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh. மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை. மதுவிலக்கு, abstinence from intoxicating drink. பூரணமதுவிலக்கு, total abstinence from drink.
இனி - Eni
adv. hence forth; hereafter, இது முதல்; 2. now, immediately, presently, இப்பொழுது, உடனே; 3. from here onwards (place) இப்பால்.
இனி என்ன செய்வாய்? what can you do further? இனி வேண்டியதில்லை, it is no longer required. இனிமேல், இனிமேலைக்கு, in future, இன்னமே, (colloquial). இன்னினி, even now, without delay, "இன்னினியே செய்க அறிவினை" (நாலடி)
சாரம் - Saaram
s. juice, இரசம்; 2. savour, flavour, sweetness, இனிமை; 3. essence, essential part of a discourse, கருத்து; 4. strength, fulness of meaning, பயன்; 5. scaffolding, சாரமரம்; 6. going, motion, movement, progress, நடை; 7. (in combin.) immoral conduct (as in விபசாரம், அபசாரம்); 8. Iye, வண்ணான்காரம்; 9. the cashew tree, கொட்டை முந்திரி; 1. the core of a tree, மரவயிரம்; 11. the south Indian mahua, இலுப்பை.
சாரக்கட்டை, a temporary wall or support for an arch. சாரஸ்திரி, சோரஸ்திரி, an adulteress. சாரத்தண்ணீர், Iye, காரத்தண்ணீர். சாரத்துளைகள், scaffold holes in a wall. சாரத்துவம், adultery, விபசாரம். சாரமில்லாத பேச்சு, a dry and empty discourse, insipid talk. சாரமிறக்க, to express juice; 2. to take down the scaffolding; 3. to swallow the juice of anything chewed. சாரமெடுக்க, to extract juice. சாரமேற்ற, to infuse savour, to flavour. சாரம் பிரித்துப்்போட, to take away the scaffolding. சாரம்போட, to erect a scaffolding. சாராம்சம், the essence, as of a fruit; 2. the purport. அசாரமான, சாரமற்ற, insipid. குருசாரம், the progress of Jupitor in its orbit. நவச்சாரம், metallic cement. நீதிசாரம், a treatise on virtue. பாதசாரம், the progress of the planets. பூமிசாரம், fatness of the earth.
From Digital DictionariesMore