இரசம் - iracam
ரசம், s. juice in general, சாறு; 2. the sweet juice of fruits etc.; 3. sweetness, இனிமை; 4. flavour, relish, சுவை; 5. quicksilver, mercury, பாதரசம்; 6. wine, திராட்சைப்பழரசம்; 7. one of the juices of the body, சப்த தாதுவிலொன்று; 8. the passions or emotions of the mind expressed by gesture -- there are 9 kinds of ரசம், நவரசம்: வீரம், அச்சம், அருவருப்பு, வியப்பு, காமம், கருணை, ரௌத்திரம், ஹாசியம், and வற்சலம்.
ஷட்இரசங்களுடனே போசனம் சேவிக்க, to prepare and serve a savoury meal, the ஷட்ரசம் being the six flavours to be seen under சுவை. இரசகந்தாயம், the season for fruits; the fatness of the earth; 2. a tax. இரசகுண்டு, a globe of fancy glass coated inside with mercury. இரசக்கட்டு, condensed mercury. இரசக் குடுக்கை, a little bottle of quick-silver. இரசதாளிக்கரும்பு, ரஸ்தாளிக்கரும்பு, a large kind of sugar cane. இரசதாளிப்பழம், ரஸ்தாளி, plaintain fruits of a sweet flavour. இரசதாளி வாழை, ரஸ்தாளி, a plantain tree of that kind. இரச பஸ்பம், calcinated mercury. இரம் முறிக்க, to carry mercury off from the body; 2. to prepare mercury for medicine. இரசவாதம், இரசவாதவித்தை alchemy இரசவாதி, an alchemist, gold maker. இரசாபாசம், (இரச+ஆபாசம்) loss of flavour or juice, confusion, disorder. இரசவைப்பு, any preparation from mercury.