பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
ஆட்டம் - Aattam
s. (ஆடு V) shaking, dancing, அசைவு; 2. a play, game, விளையாட்டு; 3. likeness, like, சாயல்.
இரண்டாட்டம் கெலித்தான், he won two games. உன் ஆட்டம் இம்மட்டோ, canst thou do no more than that? வெறியனாட்டமாய், like one that is drunk or mad. இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான், he is like his father. குதிரையாட்டமாய் ஓடு, run like a horse. குருட்டாட்டம், முகமாட்டம், கொண் டாட்டம், முரட்டாட்டம், & other compounds.
சுட்டு - Suttu
s. intention, aim,
குறிப்பு; 2. a demonstrative letter,
சுட்டெழுத்து; 3. mark, distinction,
குறி; 4. honour,
நன்கு மதிப்பு; 5.
v. n. pointing, indication, allusion.
சுட்டுப்பெயர், சுட்டுச்சொல், demonstrative pronoun (as அவன், இவன்). சுட்டு விரல், the forefinger, ஆட்காட்டி விரல். சுட்டி, adv. part. concerning, about, குறித்து. அவனைச் சுட்டிப் பேசினான், he spoke about him. பிள்ளைகளைச் சுட்டி, with regard to the children. சுட்டிக் காட்ட, to point out; to show. சுட்டிப் பேச, to hint in discourse, to make a specific reference.
From Digital DictionariesMore