பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
தாங்கு - Thaangu
III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice.
எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
ஈசன் - Iisan
s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா.
ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
From Digital DictionariesMore