இலட்சியம் - Iladsiyam
s. (x அலட்சியம்) mark, குறி; 2. match, rival, எதிர்; 3. respect, esteem, மதிப்பு.
அவன் எனக்கு லட்சியமில்லை, I have no regard for him. இலட்சியம் செய்ய, -பண்ண, to esteem, to pay respect. இலட்சியமில்லாமல் செய்ய, to act indiscriminately.
வியாக்கியானம் - Viyaakkiyaanam
s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு.
நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not. வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor. வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
வழக்கு - Vazhakku
s. common usage, manners, வழக்கம்; 2. a quarrel, a law-suit a litigation, a strife or contention; 3. style, usage, phraseology, வழக்க நடை.
வழக்கறுக்க, வழக்குறுத்த, to decide a case. வழக்காட, to be at law with one another. வழக்காயிருக்க, to be under dispute. வழக்காளி, வழக்கன், the parties in a law-suit, the complainant, plaintiff. வழக்குக்குப் போக, to go to law. வழக்குக் கேட்க, to hear or try a case. வழக்குச் சொல்ல, to make a complaint, to state a case in court. வழக்குத் தீர்க்க, to settle a dispute or law-suit. வழக்குத் தொடுக்க, to commence a law-suit. வழக்கோரம், partiality in deciding a case. அறா வழக்கு, an endless dispute. எதிர் வழக்கன், the defendant. ஒருதலை வழக்கு, an ex-parte statement. கணக்கு வழக்கு, dealings, accounts, affairs not yet settled.
From Digital DictionariesMore