தகு - taku
II. & IV.
v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain,
ஏல்.
தகாத, unfit, improper; தகாதது, that which is nufit or improper. தகாமை, neg. v. n. unfitness, impropriety. தகுந்த, தக்க, adj. part. fit, proper, தகுதியான. தகுந்த அவுழ்தம், proper remedy. தகுந்ததாவென்றுணர, to know if a thing is proper or not. தகும், it is fit or proper; தகும்படி, properly, decently. தகுமான புள்ளி, --மனிதன், a worthy, competent person. தக்கது, that which is fit or proper. தக்கனை, தக்கனையான, adj. (தக்கனை யாக, தக்கபடி, adv.) fit, suitable. தக்கார், தக்கோர், pl. (sing. தக்கான், தக்காள்), worthy or virtuous persons, the honourable.
நிஷ்கபடம் - niskapatam
நிட்கபடம், s. guilelessness, sincerity, கபடில்லாமை.