நன்மை - Nanmai
s. (
நல்) good, benefit,
உபகாரம்; 2. welfare, prosperity,
சுபம்; 3. goodness, good nature,
நற்குணம்; 4. puberty of a girl,
இருது; 5.
(Chr. us.) Eucharist,
நற்கருணை.
காரியம் நன்மையாகும், the undertaking will prosper. நன்மை கடைபிடிக்க, to hold right principles firmly. நன்மை செய்ய, to do good. நன்மை தீமை, good and evil, festive and funeral occasions. நன்மை தீமைக்கு விலக்க, to excommunicate. நன்மையாய்ப் போக, to fall out well. நன்மையான, (நன்மைப்பட்ட) பெண், a girl grown marriageable.
அன்பு - Anpu
அற்பு, s. love, affection, நேசம்; 2. grace, benevolence, கருணை; 3. devotion பக்தி.
அன்புகூர, -உற, -, -காட்ட, -வைக்க, - பூண, to love, to show affection. அன்பர், devotees. அன்பன், a dearly beloved person, friend. அன்பகன், a good-hearted man. அன்பார்ந்த ஐய! dear sir! அன்பர் குழாம், அன்பர் கூட்டம், அன்பர் களின் கூட்டம், society of friends.
அறம் -
அறன், s. virtue, ஒழுக்கம்; 2. charity, benefaction, தருமம்; 3. merit புண்ணியம்; 4. letters or words in a verse which cause ruin as in அறம் வைத்துப் பாடுதல்; 5. goddess of virtue; 6. Yama.
அறக்கருணை, ( x மறக்கருணை) benign divine grace ( x grace beslowed through trials). அறச்சாலை, an alm-house. அறஞ்செய்ய, to give alms. அறநெறி, அறத்தாறு, path of virtue (அறத்துறை). அறத்துணைவி, wife as helping the husband in acts of virtue. அறவர், அறவோர், virtuous or charitable men. அறப்பால், அறத்துப்பால், the section of a book treating of virtue. அறப்பரிசாரம், (சிலப்ப.), service rendered to ascetics.
From Digital DictionariesMore