கரு - Karu
s. foetus embryo, germ, கருவம், கருப்பம்; 2. a mould for casting metal 3. wit, judgement, genius, கருத்து; 4. discretion, prudence, புத்தி; 5. things used for ceremonies of enchantment, such as plants, roots, skin, bones etc., அஷ்டகருமக்கரு; 6. atom, electron, பரமாணு; 7. foundation, அஸ்திவாரம்; 8. middle, நடு; 9. body, சரீரம்.
கருக்கட்ட, --ப்பிடிக்க, to mould. கருக்காய், thin and immature grain in corn ears chaff. கருக்கூட, to impregnate. கருத்தெரியாதவன், an unwise man; indiscreet person. கருப்பற்ற, -க்கொள்ள, -த்தரிக்க, -த்தங்க, to conceive, to be impregnated. கருப்பை, the matrix, womb. கருப்பொருள், the beings, things etc. peculiar to different countries, 2. God. the efficient cause. கருவழிக்க, to destroy the foetus, to cause miscarriage. கருவழிய, --க்கரைய, to miscarry, to have an abortion. கருவறுத்துப்போட, to destroy a family utterly, to extirpate it. கருவாளி, கருவுள்ளவன், a witty prudent man. கருவுயிர்க்க, to bring forth young. மஞ்சள்கரு, the yolk of an egg. வெள்ளைக்கரு, the white of an egg.
கரும்பு - Karumbhu
s. sugar-cane, கன்னல், sacharum officinarum.
கருப்பஞ்சாரு, sugar-cane juice. கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish. கருப்பஞ்சோலை, a sugar-cane plantation. கருப்பம் பாகு, treacle. கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery. கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words. கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases. கருப்புவில், the sugar-cane bow of Kama. கருப்புவில்லி, Hindu cupid, Kama. கரும்பாலை, sugar-cane press. எரிகரும்பு, fuel. பேய்க் கரும்பு, wild sugar-cane.
சினை -
s. embryo, foetus of animals, கருப்பம்; 2. egg, முட்டை; 3. spawn of fish, மீன்சினை; 4. the being with young; 5. a member, component part; 6. flower bud, பூமொட்டு; 7. bamboo, மூங்கில்.
சினையாயிருக்க, to be with young (spoken of animals). சினைப்பட, -ஆக, -கொள்ள, to become impregnated, to conceive. சினைப்படுத்த, -யாக்க, to impregnate. சினைப்பட்டழிய, to perish by abortion. சினைநண்டு, a crab full of eggs. சினைமாடு, a cow in calf. சினை மீன், a fish with spawn.
From Digital DictionariesMore