கிழம் -
கிழமை, s. oldness, senility, old age, விருத்தாப்பியம்.
இந்தக்குதிரை வெகு கிழம், this horse is very old. கிழக்கதை, old stories; 2. the chattering of old people. கிழக்குதிரை, an old horse. கிழக்கோலம், the features of old age. கிழடன், an old chap (in contempt). கிழடு, (vulg.) that which is old. கிழட்டுப்பசு, an old cow. கிழத்தனம், old age, manners or habits of old people. கிழப்பிணம், an old fellow (in contempt. ) கிழமாடு, an old ox or cow. கிழவன், (pl. கிழவர், fem. கிழவி) an old man. குடுகுடு கிழவன், a tottering decrepit man; a very old man. வன்கிழம், வலுகிழம், a very old person (in contempt.)
கூனு - kunu
III. v. i. be grow hump-backed, முதுகுவளை; 2. become crooked, bend down, கோணு.
கூனல், v. n. crookedness; 2. a hump or hunch on the back; a crooked back; 3. the crescent moon, கூனற் பிறை. கூனலாயிருக்க, கூனமுதுகாயிருக்க, to be hump-backed. கூனற் கிழவன், (fem. கூனற் கிழவி) a bent old person. கூனிப்பார்க்க, to look at a thing stooping.