குழந்தை - Kozhanthai
s. an infant, a little child, பிள்ளை; 2. childhood, இளமைப்பருவம்.
குழந்தைகுட்டி, --குஞ்சு, children, infants. குழந்தை குட்டிக்காரன், a man with a large family குழந்தைச்சாமி, Skanda. குழந்தை நீர், milk of the tender cocoanut, இளநீர். குழந்தைப்பிள்ளை புத்தி, youthful indiscretion. குழந்தையாட்டம், childishness; 2. adv. like a child. குருத்து, (பச்சை) க்குழந்தை, a new born infant. கைக்குழந்தை, a child in arms. முலை குடிக்கிற குழந்தை, a sucking child.
இரத்தம் - Ratham
ரத்தம்,
s. blood,
உதிரம்; 2. red, crimon,
சிவப்பு; 3. coral,
பவளம்; 4. lungs, lever, spleen and other viscera,
ஈரல்; 5. saffron,
குங்குமம்; 6. stick lac,
கொம்பரக்கு.
இரத்தக்கலப்பு, --உறவு, relation by blood, consanguinity. இரத்தக்கவிச்சு, --க்கவில், offensive smell of blood. இரத்தக்கழிச்சல், --கிராணி, dysentery. இரத்தக்குழந்தை, a new-born child. இரத்தக் கொழுப்பு, --புஷ்டி. lustiness, stoutness, plethora, pride. இரத்தங்கக்க, இரத்தமாய் வாயிலெடுக்க, to vomit blood. இரத்தங்குத்தி வாங்க, to blood. இரத்த சம்பந்தம், consanguinity. இரத்த சாட்சி, martyrdom, martyr (chr. us.) இரத்தச் சுருட்டை, blood carpersnake, the bite of which causes blood vomiting. இரத்தம் சுண்டிப்போயிற்று, the blood is dried up by hunger, fasting etc. இரத்த நரம்பு, --தாது, vein, blood vessel. இரத்த பாத்தியம், consanguinity, kin. இரத்தபாசம், affection due to blood relationship. இரத்தப்பழி, revenge for bloodshed. இரத்தப்பிரமியம், bloody urine. இரத்தப்பிரவாகம், a flood of blood. இரத்தப்பிரியன், a blood thirsty man. இரத்த மூலம், hemorrhoids. இரத்தம் பீறிடுகிறது, blood gushes out. இரத்தம் வடிகிறது, பாய்கிறது, blood runs down. இரத்தாசயம், the heart. இரத்தாம்பரம், red or purple cloth. இரத்தோற்பலம், the red water-lily.
பிள்ளை - Pillai
s. a child male or female,
குழந்தை; 2. a son,
மகன்; 3. a title appended to the names of Vellala caste men; 4. a word joined to the name of certain animals, birds & trees (as in
கீரிப்பிள்ளை,
கிளிப்பிள்ளை,
தென்னம்பிள்ளை); the young of animals living on the branches of trees; the young of birds in general; 5. a small black bird,
கரிக்குருவி; 6. the god Bhairava.
ஏன் பிள்ளாய், well child! அவனுக்குப் பிள்ளை எத்தனை, பெண் எத்தனை, how many sons & daughters has he? பெண்ணும் பிள்ளையும், bride and bride-groom. பிள்ளையுண்டாயிருக்க, to be pregnant. பிள்ளைகரைக்க, to procure abortion. பிள்ளை கொல்லி, infanticide; 2. a disease fatal to infants; 3. a kind of assafoetida. பிள்ளைக்கவி, a species of poetic composition. பிள்ளைக்கோட்டை, a small fort. பிள்ளைத்தமிழ், a poem celebrating the various stages in the infancy and childhood of a hero. பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman. பிள்ளைத்தேங்காய், the best kind of cocoanut reserved for planting. பிள்ளைத்தேள், a centiped, scolopendra. பிள்ளைப்பூச்சி, the gryllus, an insect. பிள்ளை பெற, to be delivered of a child. பிள்ளை பெறாத மலடி, a barren woman. பிள்ளைப்பேறு, child birth. பிள்ளைமா பிரபு, (prov.) a nobleman, an eminent person. பிள்ளைமை, childishness, puerility. பிள்ளையாண்டான், a lad, a boy. பிள்ளையார், the god Ganesa. பிள்ளையார் சுழி, a curve to represent பிள்ளையார். பிள்ளைவங்கு, (prov.) a cavity to receive the mast of a dhoney. பிள்ளைவிழ, to miscarry. ஆண்பிள்ளை, a male child; 2. a man. ஊத்தாம்பிள்ளை, a bladder. பெண்பிள்ளை, a female child; 2. a woman.
From Digital DictionariesMore