கூவு - Kuuvu
III. v. i. crow, 2. coo, sing (as birds), scream; v. t. call, அழை.
கூவுதல், கூவல், கூவுகை, v. n. crowing, crying aloud. கூவுதூரம், same as கூப்பிடுதூரம், calling distance.
கூப்பிடு - Kuuppidu
VI. v. t. call one, அழை; 2. invite, வரவழை; 3. invoke, வேண்டிக் கொள்; 4. v. i. cry, shriek, clamour, கூவு.
கூப்பிடுதூரம், (lit.) the distance at which a shout can be heard; an Indian league, ஒரு குரோசம். கூப்பாடு, கூப்பிடு, கூப்பீடு, v. n. crying, a call; 2. a calling distance. கூப்பிட்டழைக்க, to cry or call aloud. கூப்பிட்டனுப்ப, to send for. கூப்பிட்டுக்கொண்டு வர, to come or follow crying in fetch. கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்பாரில்லை, there is none to answer the call.
குயில் - Kuyil
s. declamation, word, சொல்; 2. a singing bird, the Indian cuckoo; 3. a hole, துளை; 4. cloud, மேகம்; 5. a tube or pipe.
குயிலன், Indra who once assumed the form of a குயில். குயில் கூவுகிறது, the cuckoo sings. குயில்மொழி, soft sweet words like the notes of the cuckoo. கருங்குயில், the black cuckoo. புள்ளிக்குயில், வரிக்குயில், the spotted or striped cuckoo.
From Digital DictionariesMore