மூச்சு - Muussu
s. breath or respiration, சுவாசம்; 2. life, உயிர்ப்பு; 3. strength, பலம்.
அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last. மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise. ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath. மூச்சடக்க, to draw in the breath. மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma. மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence. மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale. மூச்சுவிட, to breathe, to respire. பெருமூச்சு, see under பெருமை.
பஞ்சு -
s. cotton, cotton shrub; 2. cloth; 3. down of the illecebrum lanatum, பூனைப்பஞ்சு.
கண் பஞ்சடைந்தது, the eyes became dim (everything appearing like cotton). பஞ்சணை, a bed of cotton. பஞ்சு கொட்ட, to beat cotton, for separating the seed from it. பஞ்சுக்கொட்டை, a wisp of cotton prepared for spinning. பஞ்சு சூர, to touse cotton with the fingers. பஞ்சு பன்ன, to pull cotton with the fingers. இலவம் பஞ்சு, silk-cotton, bed-cotton growing on trees. பருத்திப் பஞ்சு, the common cotton growing on shrubs. பூளைப் பஞ்சு, silk-cotton growing on a certain shrub.
முறுகு -
III. v. i. be in haste, விரை; 2. be twisted, திருகு; 3. scorch in boiling, or frying, காந்து; 4. ripen, grow dry, முதிரு.
முருகல், v. n. making speed; 2. wriggling. முறுகு சடை, matted hair-curls. முறுகு பதம், entire. dryness. திருகுமுருகல், anything crooked or twisted; 2. intricacy.
From Digital DictionariesMore