ஈசன் - Iisan
s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா.
ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
தத்துவம் - Thathuvam
s. the essential nature of things, qualities, property, குணம்; 2. power, authority, அதிகாரம்; 3. truth, reality, உண்மை; 4. bodily vigour, strength, சத்துவம்; 5. sexual energy or appetite differing according to age, constitution etc; 6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல்.
தத்துவ ஆகமம், -நூல், a book of metaphysics. தத்துவக் கடுதாசி, a power of attorney, a warrant, a letter of administration. தத்துவ சாஸ்திரம், the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics. தத்துவ ஞானி, a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 தத்துவம். தத்துவத்திரயம், a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, ஆத்தும தத்துவம், சிவதத்து வம், and வித்தியா தத்துவம். தத்துவன், Siva, as lord of all powers; 2. Argha of the Jainas. தத்துவாதி, தத்துவாதிகள், a class of the Brahman caste. தத்துவாதீதன், God as not depending on powers and faculties. ஆள் தத்துவம், personality. உடற்கூற்றுத் தத்துவம், the nature and constitution of the body anatomically considered. தெய்வ தத்துவம், the Godhead. வாலதத்துவம், juvenility. வீரதத்துவம், heroism.
திடம் - Thidam
திடன், s. strength, vigour, power, சத்துவம்; 2. firmness, உறுதி; 3. courage, fortitude, தைரியம்; 4. certainty, assurance, உறுதிப்பாடு.
திடங்கொடுக்க, to encourage, to embolden; 2. to impart strength or courage. திடங்கொள்ள, to take courage, to be firm. திடச்சாட்சி, valid testimony, evidence. திடச்சித்தம், steadiness of purpose, firmmindedness, decision. திடஞ்சொல்ல, to comfort, to encourage. திடத்துவம், strength, power, ability, வல்லமை. திடபரம், -வரம், positiveness. certainty; 2. firmness, boldness. திடப்பட, to be strengthened, comforted, confirmed. திடப்படுத்த, to strengthen, ratify; 2. (Chr. us.) to confirm. திடமாய், திடனாய், திடமனதாய், courageously, boldly. திடவான், திடபுருஷன் a strong or powerful man.
From Digital DictionariesMore