பதவி - Pathavi
s. path, way, வழி; 2. station, rank, நிலைமை; 3. eternal bliss, beatitude, முக்தி. The four kinds of பதவி are:- சாலோகம், in a place with God; சாமீபம், near to God; சாரூபம், bearing the image of God & சாயுச் சியம், identity with God.
பதவியடைய, to attain to eternal bliss, பதவிசேர.
தோற்றம் - Thoorram
s. (தோன்று) appearance, spectacle, காட்சி; 2. rise, beginning, origin, துவக்கம்; 3. birth, பிறப்பு; 4. things created, visible objects; 5. idea, எண்ணம்; 6. phenomena, நூதனக் காட்சி; 7. offspring, a son, மகன்; 8. semblance, சாயை; 9. vision, prospect, sight, தரிசனம்; 1. debut, entrance on the stage as a character வருகை; 11. a phantom, an illusion, ஆவேசம்; 12. a fit, seasonable word, ஏற்றமொழி; 13. a word, சொல்; 14. vigour, strength, வலி; 15. praise, eulogy, புகழ்.
தோற்றமாக, to appear, தோற்றப்பட; 2. to appear on the stage. தோற்றமானவன், தோற்றப்பட்டவன், a celebrated, conspicuous man. நிலாத்தோற்றம், rising of the moon. தோற்றக்கவி, a verse sung just before the arrival of an actor on the stage. தோற்றத்தரு, the verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.
மூச்சு - Muussu
s. breath or respiration, சுவாசம்; 2. life, உயிர்ப்பு; 3. strength, பலம்.
அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last. மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise. ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath. மூச்சடக்க, to draw in the breath. மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma. மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence. மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale. மூச்சுவிட, to breathe, to respire. பெருமூச்சு, see under பெருமை.
From Digital DictionariesMore