உற்சாகம் - Ursaakam
vulg. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி; 2. cheerful exertion, promptitude, ஊக்கம்; 3. spontaneous willingness, மனப்பூர ணம்; 4. extreme joy, சந்தோஷம்.
உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான், he is transported with joy. உற்சாகப்பங்கம், உற்சாகப்பிழை, unwillingness. உற்சாகப்படுத்த, உற்சாகங்கொடுக்க, to encourage, excite. உற்சாகமாய், மனோற்சாகமாய், adv. voluntarily, willingly, freely. உற்சாக மருந்து, cheering stimulent.
சாயம் - Sayam
s. a dye or colour, நிறம்; 2. evening, சாயங்காலம்.
சாயம் பிடித்தது, the cloth has taken (or imbibed) the dye. சாயக்காரன், a dyer. சாயங் காய்ச்ச, to dye, to colour. சாயங்கால விண்ணப்பம், evening prayer. சாயசந்தி, evening twilight. சாயச்சால், vat for dyeing. சாயந்தரம், சாயரட்சை, சாயலட்சை, சாயங்காலம், சாயுங்காலம், evening afternoon. சாயம்போட, --தீர, --தோய்க்க, --ஏற்ற, to dye cloth, yarn etc. சாயவேர், the roots of plants used for dyeing red. சாயவேர்ச்சக்களத்தி, a false kind of that plant. அரைச்சாயம், இளஞ்சாயம், a faint dye. எண்ணெய்ச்சாயம், oil colour. காரச்சாயம், a compound colour for dyeing. மகரச்சாயம், பூஞ்சாயம், ruddy dark colour. முழுச்சாயம், a deep and thorough dye.
எண்ணெய் - Ennai
s. (எள்+நெய்) oil.
எண்ணெயாட்ட, to express oil. எண்ணெயூற்ற, to extract oil by boiling. எண்ணெய்குத்த, to drop oil on anything. எண்ணெய்க் காப்பு, bathing with oil. எண்ணெய்ச் சாயம், oil paint. எண்ணெய்ச் சிக்கல், -ச்சிக்கு; indigestion due to unassimilated oily food; 2. greasy clotted condition of the hair; 3. obnoxious oil odour; oily condition of cloth. எண்ணெய் பூச, to besmear with oil, to anoint. எண்ணெய் வாணியன், an oil monger.
From Digital DictionariesMore