அழுத்தம் - Azhuththam
s. compactness, hardness, கடினம்; 2. obstinacy, பிடிவாதம்; 3. reservedness, of mind, அடக்கம்; 4. close fistedness, உலோபம் & 5. profoundness in mental application, ஆழ்ந்தறியும் தன்மை.
சட்டை அழுத்தமாயிருக்கிறது, the coat fits close, is tight. அழுத்தக்காரன், an obstinate man, a reserved man, a stingy fellow. அழுத்தமாய்ப் பேச, to speak emphatically; to speak reservedly. அழுத்தம் பாராட்ட, to be stiff-necked. அழுத்தம் திருத்தமான நெஞ்சுறுதி, strong-mindedness.