வாசி - Vaasi
s. quality, nature, தன்மை; 2. what is preferable or excellent, உத்தமம்; 3. health, convalescence, சுகம்; 4. quantity, portion, வீதம்; 5. discount; 6. reason, cause, நிமித்தம்; 7. abundance, மிகுதி.
வியாதிக்காரன் வாசியாயிருக்கிறான், the patient is better. வியாதி வாசியாய்ப் போயிற்று, the disease is cured. இதிலும் அது வாசி, that is better than this. நீ வாராதவாசி காரியம் கெட்டது, the business failed because you did not come. அளவு வாசிகண்டது, by measure there has been an excess. வாசியாக்க, to cure. அரைவாசி, half part. ஆனவாசி, for that reason. கால்வாசி, a fourth part. நடைவாசி, additional wages for carrying earth beyond a certain distance. நிலவாசி, nature of the soil. முழுவாசி, the whole.
அத்தமம் - attamam
அஸ்தமம், அஸ்தம், s. disappearance.
உசிதம் - ucitam
(vulg.) உச்சிதம், s. propriety, convenience, fitness, தகுதி; 2. excellence, உத்தமம்.
உசிதசமயம், a favourable opportunity. சமயோசிதம், (சமய+உசிதம்) the state of being opportune or seasonable. சமயோசிதமாய் நடக்கிறான், he accommodates himself to circumstances. உசிதா உசிதம் தெரியாமலிருக்க, to be tactless. ஔசித்யம், propriety; truth; the state of being proper, fit, excellent.
From Digital DictionariesMore