திண்மை -
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
சித்தம் -
s. purpose, கருத்து; 2. mind, உள்ளம்; 3. will, மனது; 4. certainty, திண்ணம்; 5. that which is attained; 6. that which is ready; 7. a division of time, one of the 27 யோகங்கள்.
உம்முடைய சித்தம், சித்தத்திற்குச் சரிப்போனாற்போலே, --சித்தப்படி, according to your pleasure, as you please. சித்தசமாதானம், tranquillity, சித்த சாந்தி. சித்தசலனம், instability of mind (opp. to திடச்சித்தம், firm mind). சித்தசன், Manmatha, as mind-born. சித்தசுத்தி, purity of mind. சித்த ஸ்வாதீனம், --சுவாதீனம், self-control. சித்தஞ்செய்ய, to settle, decide; 2. to desire, direct; 3. to make ready சித்தத்தியாகம், சித்தநிவர்த்தி, renunciation of all worldy desires. சித்தப்பிரமை, confusion or distraction of the mind. சித்தமாக, to will, to desire, to purpose. சித்தமிரங்க, to condescend, to concede, to yield, to do a favour. சித்தம் திரும்ப, வர, to be pleased to do to yield. சித்தவிருத்தி, temperament; disposition.