ஏற்று - Ettru
III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person.
குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me. இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that. ஏற்றுமதி, exportation, export, cargo. ஏற்றுமதிச் செலவு, shipping charges. ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export. கணக்கை ஏற்ற, to sum up. குடியேற்ற, to populate, to colonize. தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption. விளக்கேற்ற, to light a candle, to set up a candle.
பிறகு - Piragu
adv. afterwards, after, பின்பு; 2. behind, பின்புறமாய்.
அதின் (அதுக்குப்) பிறகு, thereafter. ஒருவர்பிறகாலே ஒருவராய், one after another. பிறகிட, to get behind, to fall in the rear; 2. to be passed by, பிற்பட; to be excelled or surpassed, தோற்க; 4. to be past, as time or an event, பின்வா. பிறகுவா, come after a little while, come behind me. பிறகிட்ட, that which is passed கழிந்த. பிறகே, பிறகாலே, (with gen. or dat.) behind, back. என் (எனக்குப்) பிறகே, behind me.
மது - Madhu
s. sweetness, இனிமை; 2. any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள்; 3. honey, தேன்; 4. spring, வசந்தகாலம்; 5. the name of Daitya slain by Vishnu.
மதுகண்டம், the koil, குயில். மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம், a bee; 2. honey of flowers. மதுகாரி, a bee, தேனீ. மதுகோசம், a bee-hive. மதுக்கெண்டை, a kind of fish. மதுசகன், Kama as the companion of spring. மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது. மதுதிருணம், sugar-cane, கரும்பு. மதுதூதம், the mango tree -- mangifera Indica. மதுதூலி, molasses. மதுபதி, -பலி, Kali the goddess. மதுபம், a bee, தேனீ (as sucking honey). மதுபானம், any sweet and intoxicating drink. மதுமத்தை, the ஊமத்தை plant. மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி. மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh. மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை. மதுவிலக்கு, abstinence from intoxicating drink. பூரணமதுவிலக்கு, total abstinence from drink.
From Digital DictionariesMore