குடல் - Kudal
குடர், s. entrails, bowels, guts, intestines; 2. the fungus or pithy matter in the hollow of gourds, in the body of trees etc.
குடல் அதிருகிறது, -குமுறுகிறது, - பற்றுகிறது, the bowels tremble. குடலண்டம், குடல்வாயு, hernia. Also குடலிறக்கம் & குடல்வாதம். குடலேற்றம், convulsion, spasm of the bowels, derangements of the intestines. குடலைப்பிடுங்க, to draw out the entrails; to retch, to feel nausea. குடல்காய, to starve. குடல்சவ்வு, the caul, the omentum. குடல்புரள, to feel nausea. குடல்வாதம், see குடலண்டம். கல்லுக்குடல், கற்குடல், costiveness. சிறுகுடல், மணிக்குடல், the small intestines. பெருங்குடல், இரைக்குடல்; the ventricle, stomach, the large intestines. மலக்குடல், the great gut, rectum.
வளாகம் - Valaagam
s. a place, இடம்; 2. a circuit, சூழ்ந்திருக்கை; 3. a millet-field, தினைப் புனம்.
குணம் - Kunnam
s. quality, attribute or property in general, பண்பு; 2. excellence, attribute (of a deity), இலட்சணம்; 3. dispositon, nature, temper, தன்மை; 4. good disposition of the mind or body, probity, சீர்மை; 5. wholesomeness, healthfulness, சுகம்; 6. bowstring, வின்னாண்; 7. thread, நூல்; 8. a water-pot, குடம்; 9. colour, நிறம்.
அவன் குணம் பேதலித்திருக்கிறது, (பேதித்திருக்கிறது) he is changed for the worse. அதிலும் இது குணம், this is better than that. குணத்தோடே கேள், hear me with a right spirit and patience. குண குணிப்பெயர்கள், abstract noun and subjective noun, subjects with attributes as செந்தாமரை (தாமரை = subj. or குணி, செம் = attribute or குணம்.) குணக்குன்று, --நிதி, a person of noble character, a virtuous man; 2. God. குணங்குறி, disposition, characteristics. குணசாலி, --மணி, --வான், --சீலன்,-- வந்தன்,--முடையான், குணாளன், a goodnatured person.
From Digital DictionariesMore