தெரி - Theri
II. v. i. be seen or perceived, தோன்று; 2. be known, be clear and plain, விளங்கு. Note: used only in neuter with the dative of person; the thing known stands in the nominative case and the person known in the accusative case (as in இந்த வழி உனக்குத் தெரியுமா, do you know this way? என்னை உனக்குத் தெரியுமா, do you know me?).
ஒரு கப்பல் தெரிகிறது, a ship appears. எனக்குத் தெரியாது, it is not known to me, I know it not. இந்த வேலையைச் செய்யத் தெரியுமோ, do you know how to do this work? தெரிதர, to appear; 2. to know. தெரிநிலைவினை, declarative verb containing a characteristic of tense (opp. to குறிப்பு வினை). தெரிந்தவன், a man who knows. தெரியச்சொல்ல, to say clearly. தெரியப்படுத்த, to explain, to make known. தெரியாத்தனம், simplicity, ignorance. கண்தெரியாதவன், a blind man. தெரிதல், v. n. being visible, appearance; 2. investigation, comprehension. தெரியாமை, neg. v. n. ignorance, invisibility. தெரியிழை, a woman wearing choice ornaments. தெரிவு, v. n. choosing etc.
குருடு -
s. blindness, கண் தெரியாமை; 2 dimness, opacity, காந்தியில்லாமை, 3. what is unpolished, rough, விளக்க மற்றது.
குருடன், (fem. குருடி, neut. குருடு) a blind person. குருட்டடி, a blind hit. குருட்டாட்டமாய்ப் பேச, to speak foolishly. குருட்டீ, a gad-fly. குருட்டுக்கண், a blind eye. குருட்டுக்கல், a dim gem. குருட்டுத்தனம், குருட்டாட்டம், blindness. குருட்டுநியாயம், erroneous reasoning, perverted judgment. குருட்டுப்பக்கம், the wrong side. குருட்டுப்பத்தி, superstition, blind faith. குருட்டு வைத்தியன், an ignorant physician. பிறவிக் குருடன், one born blind.