தேர் -
s. a car, a chariot, இரதம்; 2. the 4th lunar mansion, உரோகிணி.
தேரடி, the place where the car is kept. தேராள், தேரோன், a chariot-warrior, இரதவீரன். தேரிடக்கியம், a flag in a car. தேருருளை, தேர்க்கால், தேர்ச்சக்கிரம், தேர்ச்சில், a wheel of a car or chariot. தேரோடும் வீதி, the broad street round a temple along which the car is drawn. தேரோட்டம், தேரோட்டு, the running or drawing of a car. தேர்க்கவி, a kind of poem so constructed as to be written in the form of a car, இரதபந்தம். தேர்க்காரன், -ப்பாகன், a charioteer, சாரதி. தேர்க்குடம், ornamental brass knobs on a car in the form of inverted pots. தேர்க்கூம்பு, -மொட்டு, the pinnacle of a car. தேர்க்கொடி, the streamer of a car. தேர்க்கொடுங்கை, the outside arches of a car, binding it together. தேர்ச்சுவம், -த்தடம், the track of a car. தேர்த்தட்டு, the middle loft of a car, தேருட்பரப்பு, தேர்ச்சார்பலகை. தேர்ப்பார், the floor of a car on which the idol is placed. தேர்முட்டி, a platform with staircase near which the car is placed. தேர்வடம், the cable with which a car is drawn. ஓராழித்தேரோன், ஒற்றைத்திகிரித் தனித்தேரோன், the Sun, as having a car of one wheel.
தர்பியத்து - tarpiyattu
தர்ப்பீத்து, s. (Ar.) improvement, education, training; தேர்ச்சி.
தர்ப்பீத்துச்செய்ய, to educate, train, improve. தர்ப்பீத்தாக, to be trained in any art or profession.