வரம் - Varam
s. a boon, a gift, ஈகை; 2. favour, help, அநுக்கிரகம்; 3. excellency, eminence, மேன்மை; 4. one of the nine kinds of treasures, நவ நிதிகளி லொன்று.
வரகவி, a born poet, a poetic genius. வரங்கொடுக்க, to grant a boon or a special gift. வரதம், bestowing a gift, granting a boon. வரதன், a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Argha. வரநதி, the river Ganges. வரப்பிரசாதம், divine grace, a spiritual gift. வரம் பெற்றவன், one with a particular gift or talent. வரர், a sages, celestials. வரன், a husband; 2. an epithet of Siva and Brahma; 3. an elder brother, தமையன். வராங்கம், the head; 2. an elegant form; 3. a celestial body, முத்தியர் மெய். வரேந்திரன், one richly gifted. வரோதயன், one born by special favour of a god.
குணம் - Kunnam
s. quality, attribute or property in general, பண்பு; 2. excellence, attribute (of a deity), இலட்சணம்; 3. dispositon, nature, temper, தன்மை; 4. good disposition of the mind or body, probity, சீர்மை; 5. wholesomeness, healthfulness, சுகம்; 6. bowstring, வின்னாண்; 7. thread, நூல்; 8. a water-pot, குடம்; 9. colour, நிறம்.
அவன் குணம் பேதலித்திருக்கிறது, (பேதித்திருக்கிறது) he is changed for the worse. அதிலும் இது குணம், this is better than that. குணத்தோடே கேள், hear me with a right spirit and patience. குண குணிப்பெயர்கள், abstract noun and subjective noun, subjects with attributes as செந்தாமரை (தாமரை = subj. or குணி, செம் = attribute or குணம்.) குணக்குன்று, --நிதி, a person of noble character, a virtuous man; 2. God. குணங்குறி, disposition, characteristics. குணசாலி, --மணி, --வான், --சீலன்,-- வந்தன்,--முடையான், குணாளன், a goodnatured person.
நிதி - Nathi
s. a treasure, பொக்கிஷம்; 2. fulness, நிறைவு; 3. gold, பொன்; 4. gem, மணி; 5. one abounding in, as in குண நிதி, one endowed with all good qualities.
நிதிக்கோன், நிதிபதி, Kubera as lord of riches, நிதிக்கிழவன்.
From Digital DictionariesMore