நிமித்தம் -
நிமித்தியம், s. a sign, a mark, அடையாளம்; 2. an omen, an augury, சகுனம்; 3. cause, motive, முகாந்தரம்; 4. efficient cause, காரணம்; 5. for the sake of, on acccount of, பொருட்டு.
இதினிமித்தம், for this reason, therefore. அடித்ததினிமித்தம் or அடித்தநிமித்தம், as he had beaten. நிமித்தகாரணம், the efficient cause. நிமித்தக்காரர், diviners, augurs from omens, prognosticators. நிமித்தத்துவம், instrumentality, causality. நிமித்தம்பார்க்க, to consult omens, to observe superstitious signs. துர்நிமித்தம், a bad omen. நன்னிமித்தம், a good omen.
நிர்நிமித்தம் - nirnimittam
நிர்நிமித்தியம், s. without any cause.