காட்டு - Kaattu
III.
v. t. (
caus. of
காண்) show, exhibit, display, manifest, reveal, set forth,
காண்பி; 2. create,
சிருட்டி: 3. bring back,
மீட்டுத்தா; 4. offer to a deity,
நிவேதனம் செய்.
காட்டிக்கொடுக்க, to betray, to discover a person to his persecutors; 2. to teach the method of doing anything. காட்டிலும், (with acc.) than; 2. (with fut. part.) as soon as. இவளைக்காட்டிலும் அவள் அழகி, she is more beautiful than this woman. நீ போங்காட்டிலும் பணம் கொடுப்பான், he will give the money the moment you go there. காட்டு, v. n. showing, exhibition, example, evidence. சொல்லிக்காட்ட, to explain, relate. சத்தங்காட்ட, to cry, to cry aloud. தண்ணீர்காட்ட, to water the sheep, horse etc. தூபங்காட்ட, to burn incense. தெரியக்காட்ட, to show plainly, to demonstrate. புகைகாட்ட, to smoke anything (as plantains to ripen them) வழிகாட்டி, a guide.
பங்கு - Pangu
s. a share, a part, a portion, a dividend, a lot, பாகம்; 2. moiety, half, பாதி.
பங்காளன், பங்காளி, பங்குள்ளவன், a partner, a shareholder; 2. a coheir. பங்கிட, பங்கிட்டுக்கொடுக்க, to divide, to distribute, to allot. பங்கீடு, v. n. alloting, parcelling, பங் கிடுகை; 2. settlement of strife, disposal of affairs, திட்டம்; 3. measures, means, உபாயம். பங்குபங்காய்ப் பிரிக்க, to divide into portions. பங்குபாகம் பிரித்துக்கொள்ள, to divide an estate as heirs. பங்கு பிரிந்தவர்கள், those that have divided an estate as heirs. பங்குவீதம், equal shares; a share, an allotment.
காய்ச்சல் - Kaaichal
v. n. & s. dryness, heating, காய்கை; 2. fever, சுரம்; 3. dry weather, வறப்பு, 4. hatred, rancour, மனவெரிச் சல் as in பங்காளிக்காய்ச்சல், the hatred or rancour among brothers (& kinsmen). Compounds as அகோரக் காய்ச்சல், அஸ்திக்காய்ச்சல், உட்-, கணக்-, தாபக்-, தோஷக்-, முறைக்-, etc, see in their places.
காய்ச்சலாய்க் கிடக்க, -விழ, to be taken ill with fever. காய்ச்சற்கட்டி, enlargement of the spleen after a chronic fever. முறைக்காய்ச்சல், விட்டு விட்டு வருங் காய்ச்சல், an intermittent fever. விஷக்காய்ச்சல், influenza, enteric fever, pneumonia.
From Digital DictionariesMore