வயிறு - Vayiru
s. the belly, abdomen, stomach, உதரம்.
எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry. வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge. வயிறு காய, to hunger, to be hungry. வயிறு குளிர, to be satisfied, refreshed by food. வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer. வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating. வயிறு வளர்க்க, to maintain oneself. வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion. வயிற்றுக் கனப்பு, constipation. வயிற்றுக் காய்ச்சல், hunger. வயிற்றுப் பிழைப்பு, livelihood. வயிற்றுப் போக்கு, looseness of the bowels. வயிற்றுவலி, -நோய், stomach-ache. வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய. அடிவயிறு, the lower part of the abdomen. மேல்வயிறு, the upper part or region of the stomach.
குற்றம் - Kuttram
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம்.
குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
எழுத்து - Ezhuththu
s. a letter,
அட்சரம்; 2. a written letter, a writing, a painting, a bond,
சீட்டு; 3. destiny as written in the head; 4. signature,
கையெ ழுத்து; 5. Grammar,
இலக்கணம்; 6. entry, enrolment,
பெயர்ப் பதிவு.
அவனுக்கு எழுத்து இன்னம் படியவில்லை, he has no settled hand, his hand writing is not yet settled. எழுத்ததிகாரம், எழுத்திலக்கணம், (in gram.) orthography. எழுத்தறப் படிக்க, to read distinctly. எழுத்தாணி, an iron pen for writing on cadjan leaves; a style. Different kinds of style are; அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, etc. எழுத்தாணிக் கூடு, a sheath for the iron pen. எழுத்தாணிப் பூண்டு, -ப்பச்சை, the name of a plant. எழுத்துக்காரன், a writer, a clerk; 2. a painter, a cloth painter. எழுத்துக் கூட்ட, to spell. எழுத்துக் கோக்க, to compose (types). எழுத்துச் சந்தி, -ப்புணர்ச்சி, union of letters in combination. எழுத்துச் சாரியை, particles used in naming any letter as கரம், காரம், and கான். எழுத்துப் பிழை, --ப்பிசகு, an error in writing or spelling. எழுத்துவாசனையறியாத, illiterate. எழுத்து வேலை, writing, cloth painting. இடையெழுத்து, the 6 middle-sounding letters (ய், ர், ல், வ், ழ், ள்). இளவெழுத்து, a hand not yet formed. இனவெழுத்து, kindred letters. கிறுக்கெழுத்து, a letter erased cancelled; a letter badly written. குற்றெழுத்து, a short vowel. கூட்டெழுத்து, double letters written in a contracted form. சிற்றெழுத்து, small letters. சுட்டெழுத்து, a demonstrative letter. சுருக்கெழுத்து, short hand. நிலவெழுத்து, letters written with the finger on the sand. நுணுக்கெழுத்து, a character ill written, too small and not legible. நெட்டெழுத்து, a long vowel. நெட்டெழுத்துக்காரன், the writer of a document. பேரெழுத்து, large letters. முதுவெழுத்து, a well settled hand. மெல்லெழுத்து, the six soft-sounding letters (ங், ஞ், ண், ந், ம், ன்). வல்லெழுத்து, the six hard-sounding letters (க், ச், ட், த், ப், ற்). வினாவெழுத்து, an interrogative letter.
From Digital DictionariesMore