பொறு - Poru
VI. v. t. bear, sustain, சகி; 2. bear with, have patience; 3. suffer, tolerate, endure, தாங்கிக்கொள்; 4. overlook, forgive, மன்னி; 5. take a responsibility, உத்தரவாதமாகு; v. i. wait, stay, stop, நில்; 2. run aground, தட்டிபோ; 3. come upon or devolve (as duty), சுமரு; 4. become fixed or wedged in, மாட்டிக்கொள்; 5. cost as an article, be spent or expended on; 6. behave, இணங்கி யிரு.
சற்றுப் பொறு, wait a little. இது இவனைப்பொறுத்த காரியம், this devolved on him. எனக்குப் பொறுக்காது, I cannot put up with it. முடிபொறுத்த ராசா, a crowned king. பொறுத்தார் பூமிஆள்வார், the patient will govern the earth. பொறாதவன், one that cannot bear an injury or an affliction; one who is not worth anything. தலைபொறாதவன், one that cannot carry a burden on his head. பொறுத்த சமுசாரம், a large burdensome family. பொறுத்தல், v. n. forbearing; enduring. பொறுத்துக்கொள்ள, to forgive, to bear patiently. பொறுப்பு, v. n. patience toleration, sufferance; 2. heaviness, weight, charge, responsiblity; 3. prop, support. பொறுப்பற்றதனம், indifference to a trust; 2. envy. பொறுப்பற்றவன், an impatient man; 2. one destitute of help. பொறுப்பாளி, a responsible person. பொறுப்புக்கட்ட, -வைக்க, to put responsibility on one, to hold one responsible.
எல்லாம் - Ellaam
s. all, the whole, முழுவதும்.
எல்லா மனுஷரும், மனுஷரெல்லாம், எல் லாரும், எல்லோரும், all men, all people. எல்லாரிலும் மேலானவர், the greatest of all, the most high. நாமெல்லாரும், all of us. நீங்களெல்லாரும், all of you. பூமியெல்லாம், the whole earth. எல்லீரும், you all & எல்லேமும், we all.
அரங்கம் - Arangkam
அரங்கு, s. a place, site as சீரங்கம், இடம்; 2. a stage, a theatre, நாடகசாலை; 3. a learned assembly, சபை 4. an island formed by a river or rivers; 5. a battle field; 6. a fencing school, சிலம்பக்கூடம்; 7. a gambling house, சூதாடுமிடம்;
அரங்கேறின வழக்கு, a suit laid before a public assembly. அரங்கேற்ற, to exhibit a book or bring it before an assembly for approval & acceptance. அரங்க பூமி; battle field. அரங்கன், அரங்கேசன், Vishnu as worshipped at Srirangam.
From Digital DictionariesMore