பூருவம் - puruvam
பூர்வம், s. the beginning, first, ஆதி; 2. the east, கிழக்கு; 3. old times, antiquity, old tradition, பழமை; 4. the front, முன்பக்கம்; 5. former parts of the day, பகலின் முற்பாதி.
பூருவகங்கை, the Narbada river. பூருவகணம், the past moment, சென்ற கால நுட்பம். பூருவகவுளம், a tune, a melody, ஓரிசை. பூருவகர்மம், -கன்மம், actions of former births. பூருவகாலம், ancient time. பூருவசரித்திரம், ancient history. பூருவசன், the eldest son. பூருவஸ்திதி, former state. பூருவஞானம், knowledge of past events, acquired by abstract meditation. பூருவதிக்கு, -திசை, east. பூருவத்தார், the ancients. பூருவத்திலே, in old times. பூருவத்து மனுஷன், an old man who knows things of fomer days. பூருவபக்கம், -பக்ஷ்ம், the first half of a lunar month. பூருவாஷாடம், (பூராடம்), the 2th lunar asterism. பூருவான்னம், the forenoon, முற்பகல். பூருவோத்தரம், all the circumstances from ancient times. மனப்பூருவம், willingness, readiness. மனப்பூருவமாய், willingly, readily, gladly.
பூர்வம் - purvam
s. see பூருவம்.