மட்டு -
s. measure, quantity,
அளவு; 2. limit, extent, boundary,
எல்லை; 3. moderateness,
மிதம்; 4. toddy, vinous liquor,
கள்.
அம்மட்டு, இம்மட்டு, so far, so much, that much. அம்மட்டில், அம்மட்டும், so far, அந்த மட்டும். எம்மட்டு, எம்மட்டும், how much? how far? எந்தமட்டும். மட்டாய், மட்டோடே, மட்டுக்கு மட் டாய், temperately, sparingly. மட்டாய்ச் செலவழிக்க, to be frugal. மட்டிட, மட்டுக்குறிக்க, to fix a limit. மட்டில்லாத, immense, infinite. மட்டில்லாமல், மட்டுத்தப்பி, immoderately. மட்டுக்கட்ட, -ப்படுத்த, -ப்பண்ண, to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate. மட்டுக்கும், adv. so far, so much. மட்டுக்கோல், a measuring rod. மட்டுத்தப்ப, to exceed the propriety, to live extravaqantly. மட்டுப்பட, மட்டாய்ப்போக, to decreas, to be measured or limited. மட்டுப்படாதவன், a stiff-necked person. மழைமட்டுப்படுகிறது, the rain abates. மட்டுமரியாதை, -மதிப்பு, due regard, politeness; good, moral behaviour. மட்டு (மட்டுக்கு) மிஞ்சிப்பேச, to speak too much. மட்டும், until so far. அந்த ஊர்மட்டும், as far as that town. அம்மட்டும், இம்-, இம்மட்டுக்கும், only so much, just so far, hitherto. இந்நாள் மட்டும், till this day. இம்மட்டுந்தான், that is all, nothing more. நான் வருமட்டும், till I come. மட்டோடேயிருக்க, to be moderate.
எம்மட்டு - emmattu
எம்மட்டுக்கு, எம்மட்டும், inter. adv. how far, how much?
எம்மட்டும் போகிறீர், how far do you go?
ஏல் - el
ஏலு, I. v. i. (prop. இயலு) be possible, practicable, component for, கூடு.
இது உன்னால் ஏலாது (இயலாது), you cannot do that. ஏலாத காரியம், an impossible thing ஏலாதார், unfit, incompetent persons. ஏலாமை, neg. v. n. inability. ஏன்றமட்டும், as far as possible.
From Digital DictionariesMore