மண்டபம் - Mandapam
(மண்டகம்), s. an open court or shed near a temple; 2. a public resting-place, a choultry, a public hall etc., சத்திரம்; 3. (prov. for மண்டலம்) squares in mystic diagrams.
மண்டபப்படி, மண்டகப்படி, expense of bringing an idol to the மண்டபம் for a day. ஆயிரக்கால் மண்டபம், (நூற்றுக்கால்-), a hall supported by a thousand (a hundred) pillars.
நாடி - Naadi
s. an artery, a vein, a tendon,
நரம்பு; 2. the pulse,
தாது; 3. an Indian hour of 24 minutes,
நாழிகை.
நாடிக்குறி, pulse indication. நாடிதாரணை, the system of nerves and arteries with their ramifications. நாடிநிலை, state of the pulse. நாடிபார்க்க, to feel the pulse. நாடிப் பரிட்சை, acquaintance with the art of feeling the pulse. நாடிமண்டலம், the celestial equator. நாடியொடுக்கம், நாடிவிழுந்துபோதல், the sinking of the pulse. நாடியோட்டம், the beating of the pulse; the state of the pulse. அசாத்தியநாடி, pulse indicating death (opp. to சாத்தியநாடி, a pulse indicating recovery).
மண் - Mann
s. the earth, the world, பூமி; 2. soil, ground, land, நிலம்; 3. dust, earth, தூள்; 4. excellence, greatness, மாட்சிமை; 5. drum-paste (to increase its sound), முழவின் மார்ச் சனை; 6. adorning, decorating, ஒப் பனை; 7. a hill, a mountain, மலை; 8. lime-mortar, சுட்ட சாந்து.
மட்கலம், மண்கலம், மண் பாத்திரம், an earthen vessel. மட்குகை, மண்குகை, a cave in the earth, a crucible. மட்கொத்தளம், a bulwark of earth, a rampart. மட்சுவர், மண்சுவர், a mud-wall. மண் கட்ட, to form earth, as white ants; 2. to make moulds of earth for casting metals. மண்கணை, an earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு; 2. any drum. மண்டலம், மண்ணிலம், மண்ணுலகு, the earth. மண்டலத்திலே வழங்காத வழக்கம், a thing quite unusual. மண்டாங்கி, மண் தாங்கி, a board which supports, a mud wall over a door or window. மண்ணாங்கட்டி, a clod, a thing of no importance. மண்ணாசை, desire of earthly things. மண்ணிட, மண்பூச, to plaster with clay. மண்ணீரல், the spleen, the milt. மண்ணுடையான், மண்ணரிவரன், a potter. மண்ணுணி, a venomous snake, said to feed on earth; 2. a mean worthless person. மண்ணுளிப் பாம்பு, a harmless kind of snake. மண்ணுறுத்த, to adorn, to embellish (மண் 6). மண்மகள், the goddess earth. மண்மகள் புதல்வர், the agriculturists. மண்மழை, -மாரி, a shower of sand. மண்வாரி, a great wind drifting the dust. மண்வெட்டி, a hoe, a mattock.
From Digital DictionariesMore