வேறு - Veeru
s. that which is different, வேற்று மையுடையது; 2. a symbolic verb; 3. adj. other, different, மற்ற.
வெவ்வேறு, see separately. வேறாக (caus. வேறாக்க) to be separated. வேறு (வேறே) காரியம், another thing. வேறுபட, -பட்டுப்போக, to change, to become altered or alienated. வேறுபடச் சொல்ல, to alter the words. வேறுபாடு, வேறுபடல் v. n. diversity, difference, disagreement. வேறுபாடாக, (adv.) otherwise. வேறாய்ப் போக, to change, turn or alter, to take another turn. வேறே, adj. & adv. different, separately. வேறேயிருக்க, to live separately. வேறே வைக்க, to lay apart or aside. வேறொருவன், another person.
சாரம் - Saaram
s. juice, இரசம்; 2. savour, flavour, sweetness, இனிமை; 3. essence, essential part of a discourse, கருத்து; 4. strength, fulness of meaning, பயன்; 5. scaffolding, சாரமரம்; 6. going, motion, movement, progress, நடை; 7. (in combin.) immoral conduct (as in விபசாரம், அபசாரம்); 8. Iye, வண்ணான்காரம்; 9. the cashew tree, கொட்டை முந்திரி; 1. the core of a tree, மரவயிரம்; 11. the south Indian mahua, இலுப்பை.
சாரக்கட்டை, a temporary wall or support for an arch. சாரஸ்திரி, சோரஸ்திரி, an adulteress. சாரத்தண்ணீர், Iye, காரத்தண்ணீர். சாரத்துளைகள், scaffold holes in a wall. சாரத்துவம், adultery, விபசாரம். சாரமில்லாத பேச்சு, a dry and empty discourse, insipid talk. சாரமிறக்க, to express juice; 2. to take down the scaffolding; 3. to swallow the juice of anything chewed. சாரமெடுக்க, to extract juice. சாரமேற்ற, to infuse savour, to flavour. சாரம் பிரித்துப்்போட, to take away the scaffolding. சாரம்போட, to erect a scaffolding. சாராம்சம், the essence, as of a fruit; 2. the purport. அசாரமான, சாரமற்ற, insipid. குருசாரம், the progress of Jupitor in its orbit. நவச்சாரம், metallic cement. நீதிசாரம், a treatise on virtue. பாதசாரம், the progress of the planets. பூமிசாரம், fatness of the earth.
ஒன்று - Onru
s. one, one thing.
நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another. மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ. ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell. ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that. ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road. ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever. ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder. ஒன்றன்பால், (in gram.) neuter singular. ஒன்றாய், altogether. ஒன்றான குமாரன், the only son. ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க. ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations. ஒன்றுக்கொன்று, to or for each other. ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another. ஒன்றுபட, to be united; become reconciled. ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile. ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price. ஒன்றும், (with a neg. verb) nothing. ஒன்றுமற்றவன், a very poor person, a useless person. ஒன்றுமில்லை, there is nothing. ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin. ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days. ஒன்றேயொன்று, one only. ஒவ்வொன்று, each. ஒவ்வொன்றாய், one by one.
From Digital DictionariesMore