குற்றம் - Kuttram
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம்.
குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
சுழி - Suzhi
s. whirl,
நீர்ச்சுழல்; 2. a circlet, a curl in the formation of letters, as in
ண,
ன, etc; 3. a curl in hair,
மயிர்ச் சுருள்; 4. circles on the surface of water
(as by the fall of a stone); 5. curved lines on the head or body; 6.
fate, விதி; 7. the sea, கடல்; 8. crown of the head, உச்சி; 9. an inch, a unit of rainfall.
சுழிக்குணம், -த்தனம், knavery. சுழி சுத்தம் பார்க்க, to examine a horse with reference to the curl of the hair on the forehead. சுழிமாந்தம், a distortion of the bowels. சுழிமின்னல், forked lightning. சுழியன், a knave, a rogue, a whirlwind; an intelligent person. சித்திரைச் சுழியன், a storm in the month of April. சுழியாணி, the lower pin of a door or gate. சுழிபோட, to dive into water. தொப்புட்சுழி, Involution of the navel. நீர்ச்சுழி, whirlpool. பிள்ளையார்சுழி, the mark (உ) used by the Hindus in the beginning of a letter or a book.
இரக்கம் - Irakkam
s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.
இரக்கமில்லாதவன், an unmerciful man; a pitiless man. ஈவிரக்கமின்றி, mercilessly. இரக்கமுள்ளவன், இரக்கசாலி, இரக்க வாளி, இரக்கவான், a tender-hearted person. இரக்கம் செய்ய, --காட்ட, to show mercy.
From Digital DictionariesMore