பள்ளி - Palli
s. a room, a chamber, அறை, 2. a temple, a church, a mosque, ஆலயம்; 3. a school; 4. sleep, நித் திரை; 5. a bed-chamber; 6. a small town or village, சிற்றூர்; 7. affix to the name of towns (as in திரிச்சிராப் பள்ளி); 8. name of a caste; 9. an almonry, அறச்சாலை.
பள்ளிகொள்ள, to sleep. பள்ளிக் கணக்கர், pupils at school. பள்ளிக் கிராமம், a village belonging to a fane by endowment. பள்ளிக்கு வைக்க, to send one to school for the first time. பள்ளிக்கூடம், a school; a seminary; a academy. பள்ளிப் பாடம், a school lesson. பள்ளியறை, a bed-chamber. பள்ளிவாசல், a mosque.
நாகம் - Naakam
s. a snake in general, especially the
cobra capella, பாம்பு; 2. blacklead,
காரீயம்; 3. the black monkey, monkey in general,
குரங்கு; 4. sky,
ஆகாயம்; 5. a mountain,
மலை; 6. an elephant,
யானை; 7. fine cloth,
நற்சீலை; 8. an astrological karna,
ஓர்கரணம்; 9. a flowering tree, Alexandrian laurel,
புன்னை மரம்; 1. a kind of precious stone,
நாகப்பச்சை; 11. Swerga,
சுவர்க்கம்; 12. a fragrant herb,
ஞாழல்; 13. a kind of prepared arsenic,
நாகபாஷாணம்; 14. a Naga, an inhabitant of Naga Loka (a demigod with a human face and the tail of a serpent).
நாககன்னி, -கன்னிகை, a female of the Naga race. நாகசாபம், curse of a cobra inflicted on a person for killing it. நாகசின்னம், நாகசுரம், நாகஸ்வரம், a kind of clarionet. நாகசேதனன், Indra. நாகதாளி, a medicinal plant used as an antidote to snake bites. நாகதிசை, the west, மேற்கு. நாகதேவன், நாகராஜன், the chief of the Nagas, Adisesha, நாகநாதன். நாகநாதன், Indra; 2. Adisesha. நாகபடம், the spread and figured neck of the cobra, ear-rings worn by females with the figure of a serpent. நாகபந்தம், one of the curious kinds of poems. நாகபாசம், a kind of snake-like rope used in warfare. நாகப்பச்சை, a precious stone. நாகப்பற்று, --வாவை, alloy of zinc in silver. நாகப்பாம்பு, the cobra. நாகப்பிரதிஷ்டை, the making of a fiveheaded cobra and worshipping it, to expiate the sin of killing a cobra, to which sin is attributed dearth of offspring. நாகப்பூச்சி, vulg. நாக்குப்பூச்சி, an earth-worm, பூநாகம். நாகமணல், sand containing lead. நாகமல்லி, --மல்லிகை, a medicinal plant, justicia nasuta. நாகரத்தினம், a gem supposed to be found in the head of the cobra. நாகலோகம், Swerga; 2. the world of the Nagas, Patala. நாகவராளி, a kind of tune, ஓரிராகம். நாகவல்லி, நாகவள்ளி, a betel plant; 2. the finishing ceremony of a marriage on the 5th day. நாகவாடை, a slight alloy in gold coin supposed to be contracted from the metal of the mould. நாகாசனன், (அசனம், food) the Brahmany kite whose food is snakes. நாகாஸ்திரம், same as நாகபாசம். நாகாந்தகன், நாகாரி, Garuda, as the devourer of snakes. நாகாபரணன், Siva as wearing serpents as ornaments. நாகாலயம், the abode of the Nagas, the inferior world. நாகேந்திரன், as நாகதேவன்; 2. the cobra, as a deity. பறவைநாகம், a flying dragon. பைந்நாகம், a cobra.
மனம் - Manam
s. the mind, will, intention. desire,
மனசு.
மனக் கசப்பு, rancor, hatred. மனக் கடினம், hardness of heart, obduration. மனக்கண், the eye of the mind, mental sight. மனக்கலக்கம், perturbation of mind. மனக்கவலை, anxiety of mind, care. மனக்களிப்பு, -ப்பூரிப்பு, -மகிழ்ச்சி, - மலர்ச்சி, cheerfulness, hilarity, joy. மனக்கிலேசம், -ச்சஞ்சலம், -ச்சலிப்பு, - த்துக்கம், -த்துயரம்,-நோய், -வியா குலம், grief, pain of mind. மனக்குறை, dissatisfaction, discontent. மனக்கூர்மை, sagacity, acumen. மனக்கோட்டம், -த்தழுக்கம், envy, dislike. மனங்கசக்க, to have a bitter feeling, to feel remorse. மனங்கசிய, to be tender, to melt as the heart. மனங் கரைய, to relent, to be sorry for. மனங்கனிய, to be tender in mind. மனங் குத்துதல், remorse, sting of conscience. மனங் கொதிக்க, to grieve, to rage with anger. மனங் கொள்ள, to be willing. மனங் கோண, to be offended, to be cross. மனச்சாட்சி, மனோசாட்சி, conscience. மனஞ் சலித்தல், being troubled in mind, wearied in spirit. மனத் தாழ்மை, humility. மனத் திடம், -வுறுதி, firmness of mind. மனத்தியானம், meditation. மனத் திருத்தி, contentment. மன நேர்மை, sincerity. மனநோக, to regret, to feel remorse. மனந்தளம்ப, to be unstable in mind, to be distressed with cares. மனந்தளர, to grow dispirited. மனந்திரும்புதல், turning of mind; 2. (chr. us.) conversion. மனப்பாடம், a lesson learnt by heart. மனப்பூரணம், contentment, willingness. மனப்பூர்வம், willingness. மனப்பூர்வமாய், மனப்பூரணமாய், most heartily. மனமடிவு, pain of mind, mortification. மனமுறியப்பேச, to speak so as to wound one"s feelings. மனமுறிவு, aversion. மனம்பிடிக்க, to the pleasing to the mind. மனபொருந்த, to consent, to like. மனம் பொறுக்க, to have patience. மன ரம்மியம், மனோரம்மியம், contentment. மன ராசி, மனோராசி, consent of will, agreement. மனலோடாயம், faint-heartedness, dejection. மனவருத்தி, desire of mind. மனவூக்கம், -வலி, mental energy. மனாகுலம், மனோகுலம் as மனக்கிலேசம். மனோகதி, quickness of mind, acuteness of perception. மனோகரம், மனோக்கியம், anything lovely, pleasing to the mind or beautiful; 2. pleasingness. மனோகரி, a lovely or beautiful woman. மனோசன், மனோபவன், மனோயோனி, மனோற்பவன், Kama, the Hindu மனோசாட்சி, conscience. மனோச்சாகம், மனோற்சாகம், freedom of mind; 2. as மனவூக்கம். மனோ நிச்சயம், resolution. மனோபிஷ்டம், மனோபீஷ்டம், pleasure. மனோமயம், a thought. மனோரஞ்சிதம், that which delights the mind. மனோரதம், desire, pleasure. மனோரமை, the daughter of mount Meru and wife of mount Himalaya. மனோராச்சியம் பண்ண, to build castles in the air. மனோலயம், extinction of will, மன வொடுக்கம். மனோலவுலியம், whim, freak, caprice, வீணினைவு. மனோலி, a wit, a joker, ஆசியக்காரன். மனோலித்தனம், wit pleasantry. மனோவாக்குக் கெட்டாதது, that which is in comprehensible and unspeakable. மனோவியாபாரம், the operation of the mind. மனோவிருத்தி, -விர்த்தி, the extension or improvement of mind. மனோவேகமாய், as fast as the thoughts run. மனோன்மணி, Parvathi (lit. a desirable superior gem); 2. mica, அப்பிரகம்.
From Digital DictionariesMore