விரோதம் - Virootham
s. hatred, enmity, பகை; 2. diversity, contradiction, வேற்றுமை; 3. antithesis, a figure in rhetoric, விரோதாலங்காரம்.
ஒருவருக்கு விரோதமாக, against one. விரோதக்காரன், விரோதி, an enemy. விரோதம் பண்ண, to oppose, to create enmity. விரோதம் பேச, to speak with envy.
வைரம் - Vairam
s. enmity, hostility, விரோதம்; 2. bravery, வீரம்; 3. see வயிரம்.
வைரஞ் சாதிக்க, to cherish hatred. வைரன், (fem. வைரி) one that bears an obstinate hatred.
குரோதம் - kurotam
s. anger, wrath, சினம்; 2. malice, விரோதம்.
குரோதக்காரன், குரோதி, குரோதன், a rancorous person, a foe. குரோதம் செய்ய, --பண்ண, to show anger. குரோதம் தீர்த்துக்கொள்ள, to take revenge. குரோதம் வைக்க, to indulge revengeful feelings, to harbour malice. குரோதன், Veerabadra, as being wrathful.
From Digital DictionariesMore