வெட்டு - Vettu
s. a cut, a stroke.
வெட்டுக்கிலக்குப் பார்க்க, to watch an opportunity to steal or to wound another. வெட்டுக்கிளி, a locust. வெட்டுக் குருத்து, shoots or saplings of a lopped tree. வெட்டுணி, a villain, disobedient child. வெட்டுண்ண, வெட்டுண்டுபோக, வெட் டுப்பட, to be cut off. வெட்டுமுளை, money lately coined. வெட்டுரை, -ப்பணம், bad coin. வெட்டு வேளாண்மை, harvest.
விட்டில் -
s. a locust, வெட்டுக்கிளி; 2. a small winged insect, a grass-hopper; 3. a tree, trophis, பிராய்மரம்.