சாராயம் - Saaraayam
s. arrack, distilled liquor, brandy, அரக்கு.
சாராயக்கடை, an arrack shop. சாராயக்காரன், a distiller of arrack; an arrack seller. சாராயக்குத்தகை, arrack-rent. சாராயம்வடிக்க, --காய்ச்ச, to distil arrack. சாராயவெறி, intoxication. அரிசிச்சாராயம், arrack from rice and jaggery. கள்ளுச்சாராயம், arrack from toddy. பட்டைச்சாராயம், arrack from the astringent bark of வேலமரம்.
குடி - Kudi
VI. v. t. drink, பருகு; 2. inhale, உறிஞ்சு; 3. suck, முலையுண்ணு; 4. take medicine, swallow; 5. absorb, imbibe, உட்கொள்; 6. smoke as tobacco.
பூமி மழையைக் குடிக்கிறது, the earth absorbs the rain. நல்லபால் குடித்து வளர்ந்தான், he has been virtuously brought up. குடி, v. n. drunkenness; drinking; 2. s. drink, beverage. குடிகாரன், குடியன், a drunkard. குடித்தல், v. n. drinking. குடிநீர், a medicinal decoction; drinking water. குடிவெறி, intemperance, intoxication. சுருட்டு, (புகை) குடிக்க, to smoke a cigar.
வெறி - Hatred Veri
s. drunkenness, fury from liquor, மயக்கம்; 2. anger, கோபம்; 3. confusion, giddiness, கலக்கம்; 4. fermented palmtree sap, கள்; 5. fear, அச்சம்; 6. a bad smell, துர்க் கந்தம்; 7. a devil, பிசாசம்; 8. a sheep, ஆடு; 9. the dance of a pujari possessed by an evil spirit, வேலனாடல்; 1. swiftness, சீக்கிரம்.
அவனுக்கு வெறியெடுத்தது, -தாக்கிற்று, he grew drunk. அவனுக்கு வெறி மீறியிருக்கிறது, he is dead drunk. வெறிகொள்ள, to get drunk. வெறிக் குணமுள்ளவன், a peevish man. வெறியன், வெறிகாரன், a drunkard, a mad man. வெறியாட, to be drunk, to act like a drunken person; 2. to shake and gesticulate as though possessed, through incantations. வெறியாட்டு, the agitation and shaking, etc, of one possessed. வெறியாடல், Bacchanalian dancing, தேவர்க்கு ஆடும் கூத்து. வெறியாட்டாளர், Bacchanalian dancers. மூர்க்க வெறி, fury, intoxication to madness.
From Digital DictionariesMore