கொடுமை - Kodumai
s. crookedness, வளைவு; 2. severity, harshness, கொடூரம்; 3. violence, cruelty, tyranny, oppression, கொடுங்கோன்மை; 4. sin, பாவம்; 5. injustice, bias. (See அருமை Note.)
வயிற்றின் கொடுமையினால் வருந்து கிறான், he is vexed by want of food. கொடிய காடு, a wild desert. கொடிய கோபம், severe wrath. கொடியது, கொடிது, that which is cruel or horrid. கொடியமனசு, a cruel mind. கொடியன், கொடியோன், கொடியவன் a cruel wretch. கொடுங்கண், an evil eye. கொடுங்கோலன், an unjust king, a tyrant. கொடுசூரி, -சூலி, a cruel wicked woman. கொடுஞ்சொல், sharp or harsh language. கொடுஞ் சொறி, scab or itch in animals. கொடுந் தமிழ், the vulgar colloquial dialect of Tamil as opposed to செந்தமிழ், the highest dialect. கொடுந்துயர், lit. extreme pain; death. கொடுமரம், a bow, வில்; 2. sagittarius, தனுராசி; 3. the rung of a ladder. கொடுமை செய்ய, -இழைக்க, -ப்படுத்த, to do violence, to oppress, to tyrannize. கொடும்பசி, severe hunger. கொடும்பாவி, a great sinner; 2. the huge person personating vice in the form of a woman dragged through the streets in time of drought to bring rain, கொடும் பாவை. கொடும்புலி, the lion, சிங்கம். கொடுவரி, the tiger. கொடுவாய், a kind of wild animal, the hyena; 2. a kind of fish. கொடுவாளை, கொடுவா, as கொடுவாய்; 2. கொடுவாள், a garden sickle or hook. கொடுவினை, evil deeds of former births. கொடுவை, wickedness, mischievousness, துஷ்டத்தனம்.
அரிய -
adj. difficult. dear; see அருமை.
அரியகாட்சி, a rare sight.
கடுமை -
s. severity, cruelty, அகோரம்; 2. rigor, rigidness strictness கண்டிப்பு; 3. excessiveness, intensity, மிகுதி; 4. vehemence, furiousness, மூர்க்கம்விரைவு; (see அருமை note).
கடிய, கடு (before vowels கட்டு) adj. vehement, severe, strong, great. கடியது, கடிது, that which is severe. கடியவன், கடியன், a cruel man. கடியவார்த்தை, கடுஞ்சொல், an angry expression, harsh word. கடுங்கண்; cruelty. கடுங் காய்ச்சல், violent fever. கடுங்காரம், powerful caustic. கடுங்காற்று, a furious wind. கடுங்கோடை, intense heat, severe drought. கடுங்கோபம், vehement anger, wrath. கடுஞ் சிநேகம், excessive intimacy. கடு நடை, a hard walk. கடுந்தரை, hard soil. கடும்பத்தியம், strick diet. கடுமுள், weapons in general. கடுமூர்க்கம், vehemant anger, fury. கடுமூர்க்கன், a furious man. கடுவாயன், a rough angry speaker. கடுவிலை, exorbitant price. கடுவெயில், burning sun. கடுவெளி, a barren plain. கட்டழகி, a woman of great beauty. கட்டழகு, great beauty. கட்டழல், a vehement fire. கட்டாண்மை, great bravery. கட்டிளமை, very tender age.
From Digital DictionariesMore